ரெயில் விபத்து - 13 அதிகாரிகளுக்கு சம்மன்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களில் விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது, கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், கவரப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி, கவரப்பேட்டை சிக்னல் ஆப்பரேட்டர்கள் உள்பட 13 பிரிவு அதிகாரிகளுக்கு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.

இவர்களிடம் ரெயில் விபத்துக் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அந்த விசாரணைக்கு பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

summan send to 13 officers for train accident


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->