கன்னியாகுமரியில் திடீர் கடல் உள்வாங்கல்...! சுனாமிக்கான முன்னோட்டமா...?
Sudden sea inflow Kanyakumari preview tsunami
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை பவுர்ணமியை ஒட்டி கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்து, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியது.இதனால் கடலடியில் இருந்த மணல் பரப்புகளும் பாசி படிந்த பாறைகளும் வெளிப்பட, சுற்றுலா பயணிகள் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கினர்.

அதே சமயம், கடல் சீற்றமாக இருந்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு சேவை காலை 8 மணிக்கு நிறுத்தப்பட்டு, 9 மணிக்குப் பிறகு மட்டுமே மீண்டும் தொடங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி,வாவத்துறை, கோவளம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், கீழமணக்குடி உள்ளிட்ட பல கடற்கரை கிராமங்களிலும் கடல் உள்வாங்கி, மணல் பரப்புகள் மற்றும் பாறைகள் வெளிப்பட்டு காணப்பட்டன.
இதில் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் “இது சுனாமி முன்னோட்டமா?” என பதட்டத்துடன் கேள்வி எழுப்ப, அதிகாரிகள் “இது பவுர்ணமி அலை மாற்றம் மட்டுமே” என விளக்கமளித்தனர்.
English Summary
Sudden sea inflow Kanyakumari preview tsunami