வீடு கட்டுவதற்கான மானிய உதவி தொகை..குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் MLA நேரு ஆலோசனை!
Subsidy assistance amount for building a houseConsultation with MLA Nehru along with the officials of the hut replacement committee
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு(எ)குப்புசாமி MLA ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவரும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நேரு(எ)குப்புசாமி MLA புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து இன்று குடிசை மாற்று வாரிய தலைமை அதிகாரி திரு.ரவிச்சந்திரன் அவர்களை சந்தித்து உருளையன்பேட்டை தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனையில் கண்டக்டர் தோட்டம் பகுதியில் உள்ள அரசு குடியிருப்புகளில் விடுபட்டு போன குடியிருப்புகளில் மறுசீரமைப்பு செய்தல்.கண்டக்டர் தோட்டம் பகுதியில் D-1, D-2, D-3, D-4 ஆகிய நான்கு அரசு குடியிருப்புகளுக்கு செல்லும் வழிகளில் உள்ள சிமெண்ட் ரோடுகள் புதிய ரோடு அமைத்தல்,
கோவிந்தசாலை ராஜீவ் காந்தி அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் சீரமைத்தல் மற்றும் புதுச்சேரி அரசு மூலம் வீடு கட்டுவதற்கான மானிய உதவி தொகை வழங்குதல் போன்ற மக்கள் பிரச்சினை பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.ஆலோசனையில் குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளர் திரு.அனில்குமார்இளநிலை பொறியாளர் திரு.பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
English Summary
Subsidy assistance amount for building a houseConsultation with MLA Nehru along with the officials of the hut replacement committee