நீரில் மிதந்து யோகா - உலக சாதனை படைக்க துடிக்கும் மாணவர்கள்.!
students yoga in water
திண்டுக்கல் மாவட்டம் பழநி சிவாலயா யோகா மைய மாணவர்கள் தண்ணீரில் மிதந்தபடியும், தண்ணீருக்கு அடியிலும் யோகா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தண்ணீர் சிக்கனம், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.
மாணவர்கள் நீச்சல் குளத்தில் நீரில் மிதந்தபடி மச்சாசனம், பத்மாசனம், தித்திலி ஆசனம், சாந்தி ஆசனங்களையும், நீருக்கு அடியில் சிரசு ஆசனம், பச்சிமோதாசனம், தனுசு ஆசனம் என பல வகையான யோகாசனங்களையும் செய்து, பிரமிக்க வைத்தனர்.
இது குறித்து ஆசிரியர் சிவக்குமார் தெரிவித்ததாவது:- ”தண்ணீர் மற்றும் மரங்களின் அவசியத்தை உணர்த்தும் விதமாக மாணவர்கள் நீரில் மிதந்தும், நீருக்கு அடியிலும் யோகாசனங்களை செய்தனர். நீருக்கு அடியில் யோகா செய்வதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.