பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
Student who impregnated Plus 2 student arrested under POCSO Act
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவனும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவியும் ஒரே வகுப்பில் படித்துவந்தனர். இந்தநிலையில் ஒரே வகுப்பில் படிப்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தது மட்டுமல்லாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் மாணவியின் பெற்றோர் அவளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததால் அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரித்தபோது மாணவியின் கர்ப்பத்துக்கு அவளுடன் படித்து வரும் சக மாணவன்தான் காரணம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தனர்.
English Summary
Student who impregnated Plus 2 student arrested under POCSO Act