மாணவர்கள் உறுப்பினர் சேர்க்கை..திமுக தொகுதி செயலாளர்கள் ஆலோசனை!
Student Membership DMK Constituency Secretaries Advise
திமுக தொகுதி செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர் திருமிகு. இரா. சிவா அவர்கள் தலைமையில் நடந்தது.
புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் மாணவர்கள் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக தொகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நன்பகல் 12.00 மணியளவில் லப்போத் வீதியில் உள்ள தலைமை கழகத்தில் மாநில கழக அமைப்பாளர் திருமிகு. இரா.சிவா அவர்கள் தலைமையிலும் மாநில மாணவரணி அமைப்பாளர் திரு. எஸ்.பி. மணிமாறன் மற்றும் துணை அமைப்பாளர்கள் கண்ணன், அமுதன், கீர்த்தி எழினி, ஸ்டீப்பன் ராஜ், முத்தரசன், தமிழ் மகள் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கழக வளர்ச்சி பற்றியும், மாணவரணி தொகுதி நிர்வாகிகள் தேர்வு மற்றும் இல்லம் தோறும் மாணவரணி உறுப்பினர் விண்ணப்பத்தாள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, லோகையன், ஆறுமுகம், அருள்செல்வி பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், செந்தில்வேலன், பிரபாகரன், அமுதா குமார் தொகுதி செயலாளர்கள் சக்திவேல், சீதாராமன், பாண்டு. அரிகிருஷ்ணன், நடராஜன், சவுரி ராஜன், மணிகண்டன், தியாகராஜன், சிவகுமார், ஆறுமுகம், வடிவேல், மோகன், இளஞ்செழிய பாண்டியன், கலிய. கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், கலைவாணன், சதிதியவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
English Summary
Student Membership DMK Constituency Secretaries Advise