சக மாணவிக்கு காதல் கடிதம் தந்த மாணவன்.. மன்னிப்பு கடிதம் கேட்டதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..! - Seithipunal
Seithipunal


சக மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவனை மன்னிப்பு கடிதம் எழுத சொல்லியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிகள் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ரித் துள் என்ற மாணவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார் இவர் சக மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 இந்த விஷயம் ஆசிரியருக்கு தெரியவரவே மாணவனை கண்டித்ததோடு மன்னிப்பு கடிதம் எழுத கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுத்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் மற்றும் மாணவரின் உறவினர்கள் மாணவனின் சடலத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆசிரியை மீது எந்த தவறும் இல்லை ஒழுங்கீன நடவடிக்கைகாக மன்னிப்பு கடிதம் கேட்ட நிலையில் அதை அவமானமாக கருதி மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆசிரியர் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கூறி தண்ணீர் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 30க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

.இருதரப்பினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால் என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் அதிகாரிகள் குழ்ம்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student Committed Suicide Near Namakkal


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->