கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை...மாணவி எடுத்த விபரீத முடிவால் வெளிச்சத்துக்கு உண்மை..! - Seithipunal
Seithipunal


சுற்றுலா அழைத்து செல்வதாகக்கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக்கு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரில்க்கு செல்வதாக கூறி சென்றவர். பண்ருட்டி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர். விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த மாணவி பயின்ற கல்லூரியில் கல்வி சுற்றுலாவுக்காக அழைத்து சென்று அங்கு மாணவ மாணவிகளை தனித்தனி அறையில் தங்கவைத்துள்ளனர்.

அப்போது அந்த மாணவியை அழைத்து சென்றனர். அவரை கட்டாயபடுத்தி மது அருந்த வைத்து மயக்கமடைந்த அவரை பாலியல் தொல்லை செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து, மீண்டும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்ய அந்த மாணவி வர மறுத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவியின் நண்பர்கள் கேட்ட போது தனக்கு நடந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார். அப்போது தான் அதே போல மாணவிகள் பலர்  அந்த கொடுமைக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது.

இதனை அந்த மாணவி பெற்றோரிடம் கூறிய போது விஷயத்தை மறைத்தற்காக அவரை பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சுற்றுலா ஏற்பாடு செய்த தலைமை ஊழியர் நிஷா என்ற பாத்திமா (32), ஆசிரியர் அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர்.

அந்த கல்லூரி உரிமையாளர் டேவிட் மற்றும் அதற்குத் துணைபோன ஊழியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களையும் கைது செய்தால் தான் மாணவிகளுக்கு சரியான பாதுகாப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student attempted suicide by sexual harassment


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,




Seithipunal