படிக்கட்டில் தொங்கி சென்ற மாணவர்களை கண்டித்த ஓட்டுனரை தாக்கிய மாணவர்.! - Seithipunal
Seithipunal


படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை மேலே வரச் சொன்ன அரசு பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்திய மாணவரை கைது செய்யக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பணிமனையில் இருந்து அரசு பேருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை சென்றது. இப்பேருந்தை சரவணன் என்பவர் ஒட்டி வர மணிகண்டன் என்பவர் நடத்துனராக இருந்தார். அருங்காட்சியகம் பேருந்து நிலையத்தில் பேருந்து வந்தபொழுது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் ஏறினார்கள்.

அப்போது மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மாணவர்களை மேலே ஏறி வருமாறு கூறினார்கள். இதனால் மாணவர்களுக்கும் கண்டக்டர், டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் பேருந்து அன்னவாசலை கடந்து செல்லும் பொழுது மாணவர் ஒருவர் டிரைவரை கடுமையாக தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் பேருந்து சாலை ஓரமாக நிறுத்த வைத்தார்கள். இதை தொடர்ந்து டிரைவரை தாக்கிய மாணவனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student attacked the driver who reprimanded the students who were hanging on the stairs


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->