மன அழுத்தமா? அல்லது வேறு காரணமா? தற்கொலை செய்து கொண்ட காவலர் அபிநயா...! - Seithipunal
Seithipunal


காவலர் 'அபிநயா' என்பவர், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்திலுள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக, திடீரென பெண் காவலர் 'அபிநயா' துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தத் தகவல் அறிந்ததும், நாகூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணைக்கு பிறகு தான், தற்கொலைக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stress Or some other reason Cop Abhinaya committed suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->