தமிழகத்தில் 280 உதவி ஆய்வாளர் காவல் நிலையங்கள், ஆய்வாளர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள், ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்ற வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும், சட்டம் ஒழுங்கு, சாதி, வகுப்புவாத பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் முடியும் என கூறப்பட்டுள்ளது.

பொதுவாக மக்கள் தொகை அதிகரிக்கும் போது, அதற்கேற்ப மக்களுக்கான பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் கருத்தில் கொண்டு காவல் நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும் அல்லது தரம் உயர்த்தப்படும்.

எஸ்.ஐ தலைமையிலான காவல் நிலையங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வரையிலான அதிகாரம் மட்டுமே உண்டு. ஆனால் அவை இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதன் மூலம், அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு மேம்பாடு, குற்றங்களை தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய முடியும்.

அப்போது அதிக எண்ணிக்கையில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்படுவர். இதனால் ரோந்துப் பணி மற்றும் பிற காவல்துறை பணிகளைச் செய்ய முடியும். குற்றப் புலனாய்வுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதால், குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Steps to upgrade 280 Assistant Inspector Police Stations to Inspector Police Stations in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->