மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட கல்லூரி மாணவர்கள் திட்டம்.. குவிக்கப்பட்ட போலீஸ்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறினர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து தனியார் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பள்ளி வாகனங்கள், மாணவ-மாணவிகளின் சான்றிதழ் ஆகியவற்றிற்கு தீ வைக்கப்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்ற வருகிறது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி மாணவி உடல் மறு உடற்கூராய்வும் செய்யப்பட்டது. 

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். வாட்ஸ்அப்பில் குழு அமைத்து கல்லூரி மாணவர்கள், போராட்டக்காரர்களை திரட்டியுள்ளனர். வாட்ஸ்அப் தகவலால் அண்ணாநகர், கீழ்பாக்கத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போராட்டத்தில் மாணவர்கள் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் காவல்துறை எச்சரிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

srimathi death chennai college student protest


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->