சுனாமி எச்சரிக்கை! அலாஸ்காவில் அதி பயங்கர நிலநடுக்கம்! 7.3 ஆக பதிவான ரிக்டர் அளவு...!
Tsunami warning Powerful earthquake hits Alaska 7point3 magnitude
அமெரிக்கா நாட்டின் அலாஸ்கா மாகாண கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதில் அந்த மாகாண மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிற்கு தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.மேலும், 20 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீப கற்பத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. சாண்ட் பாயிண்ட் கடற்கரை பகுதிகளில் அதிகபட்சமாக 6.1 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் 2 மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
ஆனாலும் அலாஸ்கா கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.மேலும், பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய 'ரிங்க் ஆப் பயர்' என்ற இடத்தில் அமைந்துள்ளது.
English Summary
Tsunami warning Powerful earthquake hits Alaska 7point3 magnitude