முதல் முறையாக 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டா..கிருஷ்ணகிரிக்கு அடித்த ஜாக்பாட்!
For the first time 85,711 people received house site pattas Jackpot for Krishnagiri
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை ரோடு மேம்பாலத்தில் இருந்து முதல்-அமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது . இந்த ரோடு ஷோ ராயக்கோட்டை மேம்பாலம், அண்ணா சிலை, பெங்களூரு சாலை வழியாக 5 ரோடு ரவுண்டானா வரை நடந்தது .
பின்னர் அங்கிருந்து சென்ற முதல்-அமைச்சர், சென்னை பைபாஸ் ரோடு வரையில் சென்று, பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து அவர் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவிற்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சரை கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
For the first time 85,711 people received house site pattas Jackpot for Krishnagiri