முகலாயர்கள் கொலைகாரர்கள், கோயில்களை அழித்தவர்கள்.. மத்திய அரசின் பாட புத்தகத்தில் சர்ச்சை!
National Education Policy NCERT Textbook Mughals
முகலாய ஆட்சியாளர்களைப் பற்றி மத்திய அரசு இயக்கும் என்சிஇஆர்டி (NCERT) அமைப்பின் புதிய வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் சர்ச்சையான பாடம் இடம்பெற்று உள்ளது.
8-ம் வகுப்பு மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில், முகலாய பேரரசர்கள் பாபர், அக்பர் மற்றும் ஔரங்கசீப் ஆகியோர் வெகுஜனக் கொலைகாரர்களாகவும், கோயில்களை அழித்தவர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பாபர், மண்டை ஓடு கோபுரங்களை அமைத்தே கொடூர ஆட்சி நடத்தினார் எனவும், அக்பர் மதம் சார்ந்த கொடூரங்கள் செய்ததாகவும், ஔரங்கசீப் மதுரா, பனாரஸ், சோம்நாத் உள்ளிட்ட கோயில்கள் மற்றும் சீக்கிய, சமண நிறுவனங்களை அழித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் மாற்றப்பட்ட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். புதிய மாற்றங்களைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த NCERT அதிகாரி ஒருவர், “பாடநூல்கள் ஆதார அடிப்படையில் உருவாக்கப்பட்டவை, ஏதோ ஒருதரப்பின் பார்வையில் எழுதப்பட்டவை அல்ல” எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே, 7-ம் வகுப்பு வரலாற்று நூல்களில் இருந்த முகலாயர் மற்றும் டெல்லி சுல்தான்கள் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டன. பதிலாக, மகா கும்பமேளா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் குறித்து சேர்க்கப்பட்டுள்ளது.
English Summary
National Education Policy NCERT Textbook Mughals