இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த 2 அகதிகள்! தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் அங்குள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலை உயர்ந்துள்ளதால் தொடர்ந்து தனுஷ்கோடி வந்துள்ளனர். 

250க்கும் மேற்பட்டவர்கள் படகுகள் மூலம் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அனைவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி பின் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் வீடுகள் வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் படகுமூலம் 2 பேர் அகதிகளாக இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 58) தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நேச பெருமாள் (வயது 60) என்பது தெரிய வந்தது. 

மேலும் கடும் பொருளாதார நெருக்கடியினால் வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்துள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் விசாரணைக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மறுவாழ் முகாமில் ஒப்படைக்க உள்ளதாக கடலோர பாதுகாப்பு போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

srilanka at dhanushkodi from 2 refugees police investigation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->