நடு கடலில் தத்தளித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்களை மீட்ட நாகை மீனவர்கள்!
Sri Lankan fishermen struggling sea rescued nagai fishermen
நாகை மற்றும் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடுக்கடலில் இலங்கையைச் சேர்ந்த 3பேர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கடலோர காவல் படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
வேதாரண்யம் அருகே ஆற்காட்டுதுறைமுகம் கடல் பகுதியில் இன்று காலை, ஒரு படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படை பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து கடலோர காவல் படையினர் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று நடு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகையும் அதிலிருந்து 3பேரையும் பத்திரமாக மீட்டு வேதாரண்யம் கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 25) ஸ்ரீகாந்த் (வயது 37) ரீகன் (வயது 45) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் வந்த படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
English Summary
Sri Lankan fishermen struggling sea rescued nagai fishermen