அதிரடி காட்டும் இலங்கை கடற்படை - தமிழக மீனவர்கள் 19 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தனர். மேலும், மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து மீனவர்களை காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து, மீனவர்கள் 19 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri langan navy arrest nineteen tamilnadu fisher mans


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->