திருவண்ணாமலை சுயம்பு சுப்பிரமணியசாமி கோவிலில் ஜப்பானியர்கள் நடத்திய சிறப்பு யாகம்.! 
                                    
                                    
                                   special yagya conducted by the Japanese at Thiruvannamalai
 
                                 
                               
                                
                                      
                                            திருவண்ணாமலை : தேவனாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு சுப்பிரமணியசாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள், உலக நன்மைக்காகவும், நாடு முழுவதும் மழை பொழிய வேண்டியும் சிறப்பு யாகத்தில் ஈடுபட்டனர். 
இதில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாக்கிகோ ஓஷி, மாஸ்கோஓஷி, சாயாஓஷி என பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த யாகத்தினை சுயம்பு சுப்பிரமணியசாமி கோவில் குருக்கள் சந்தோஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். இந்த யாகத்தின் போது, யாக குண்டத்தில் பல்வேறு வகையான சிறப்பு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் போடப்பட்டது. 
இதற்கு பின்னர், சுயம்பு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை மரக்காணத்தை பூர்வீகமாக கொண்ட  சுப்ரமணியம் செய்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       special yagya conducted by the Japanese at Thiruvannamalai