100 பெண்கள் கொலை அதிர்ச்சி...! - தர்மஸ்தலா மர்ம வழக்கில் SIT விசாரணைக்கு இடைக்கால தடை...!
Shocking murder of 100 women Interim stay on SIT investigation into Dharmasthala mystery case
கர்நாடக மாநிலத்தை அதிரவைத்த மர்மமான வழக்கு, தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் நடைபெற்றதாக கூறப்படும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொலைகள் குறித்து நாடு முழுவதும் பரபரப்பு எழுந்தது.அங்கு தூய்மை பணியாளராக பணிபுரிந்த சென்னையா என்ற நபர், “பெண்கள் கொல்லப்பட்டு உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன” என்று பகீரமான தகவலை வெளியிட்டதோடு, மண்டை ஓடு ஒன்றை எடுத்துக்கொண்டு கோர்ட்டில் சென்று வாக்குமூலம் அளித்தார்.

இதன் பின்னர் நாடு முழுவதும் அதிர்ச்சி அலை பரவியது.இந்த சம்பவம் பெரிதாகி விட்ட நிலையில், கர்நாடக அரசு உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், SIT விசாரணையில் சென்னையா அளித்த தகவல்கள் பொய்யானவை என்று தெரியவந்ததால், அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கில், கிரீஷ் மட்டன்னவர், மகேஷ் திமரோடி, ஜெயந்த், விட்டல் கவுடா ஆகிய நால்வரிடம் SIT அதிகாரிகள் பலமுறை விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் ஒன்பது முறை SIT முன்னிலையில் ஆஜராகி, 150 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, அந்த நால்வரும் SIT விசாரணையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு குறித்து நேற்று நீதிபதி முகமது நவாஸ் தலைமையில் விசாரணை நடந்தது. மனுதாரர்களின் தரப்பில் வக்கீல், “எங்கள் வாடிக்கையாளர்கள் குற்றவாளிகளாகவும் இல்லை, சாட்சிகளாகவும் இல்லை. இருந்தும் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைப்பது சட்ட விரோதம்” என வாதிட்டார்.
இதற்கு எதிராக SIT சார்பில் வக்கீல் பதிலளித்தார். இருதரப்பினரின் வாதங்களையும் கவனமாக கேட்ட நீதிபதி முகமது நவாஸ், தர்மஸ்தலா மர்ம மரண வழக்கில் SIT விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், வழக்கின் தொடர்ந்த விசாரணை நவம்பர் 12-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
Shocking murder of 100 women Interim stay on SIT investigation into Dharmasthala mystery case