எஸ்.பி. பரிந்துரை… கலெக்டர் உத்தரவு...! - குண்டர் சட்டத்தில் சிக்கிய தூத்துக்குடி வாலிபர்
SP recommendation Collector order Tuticorin youth booked under Goondas Act
தூத்துக்குடியைச் சேர்ந்த ரோசரி மகன் மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் (27), வடபாகம் காவல் நிலையத்தில் பதிவான கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டார்.

மேலும்,பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதி, அவர்மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம், 1982 (குண்டர் சட்டம்) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டதன் பேரில், மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
English Summary
SP recommendation Collector order Tuticorin youth booked under Goondas Act