நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றார் எஸ். பி. அம்ரித்.. கோப்புகளில் கையெழுத்திட்டு பணி தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி. அம்ரித் ஐ.ஏ. எஸ் பொறுப்பெற்று கொண்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இருந்து வந்தார். அவரை பணி மாற்றம் செய்ய கூடாது என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அவரை பணியிடை மாற்றம் செய்ய தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை பணியிடை மாற்றம் செய்ய அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த எஸ்.பி.அம்ரித்தை நீலகிரி ஆட்சியராக அறிவித்தது.

இந்நிலையில், இன்று காலை ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த எஸ்.பி.அம்ரித் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றுகொணார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்து. எஸ்.பி.அம்ரித் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SP Amrith take charge Nilgiris Collector


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->