தகப்பனை கொன்று தாயுடன் உல்லாசம்.! விசாரணையில் பகீர் தகவல்.!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சாத்தூரை சேர்ந்த சுப்புராஜ் சில மாத காலமாக காணவில்லை என்று அவருடைய சகோதரர்கள் விசாரித்துள்ளனர். அப்பொழுது அவருடைய மகனும், மகளும் எங்களுடைய தந்தை வெளியூர் சென்றிருக்கிறார் என்று கூறியுள்ளனர். 

இருப்பினும் அவர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. காவல் துறையிடம் புகார் அளிக்கவே அவர்களது வீட்டின் பின்புறத்தில் எலும்புகள் தலைமுடி உள்ளிட்டவை இருந்ததாக தகவல் கொடுத்தனர். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியை தோண்டினர்.

Image result for உல்லாசம் seithipunal

அப்பொழுது அங்கே எலும்புகள் கிடைத்துள்ளது. அதன் பின்னர் சுப்பராஜ் குடும்பத்திடம் விசாரித்ததில் அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் பின்னர் விசாரணையில் சுப்புராஜின் மனைவி பிச்சையம்மாள் மற்றும் அவருடைய மகன் சுரேஷ்க்கும் இடையில் தகாத உறவு இருந்ததை சுப்புராஜ் கண்டறிந்து கண்டித்துள்ளார்.

இதன்காரணமாக ஆத்திரமடைந்த தாயும், மகனும் சுப்புராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தபொழுது அவரை தாக்கி கொன்று புதைத்து விட்டனர். இதன் காரணமாக சுப்புராஜ் மனைவி பிச்சையம்மாள், அவருடைய மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி வெளியில் தெரிந்ததும் ஊர் பொதுமக்கள் சுரேஷை தாக்க முற்ப்பட்டனர். அதன்பின்னர் கொலை வழக்கில் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

son killed father for illegal relationship with mother


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->