மது அருந்துவதை கண்டித்த தந்தை.! மனமுடைந்த மகன் எடுத்த விபரீதம் முடிவு.!
Son commits suicide in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மது அருந்துவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் கூலித்தொழிலாளி தமிழரசன். இவருக்கு மது அருந்து பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்தி உள்ளார். இந்நிலையில் நேற்று ராஜா மது அருந்தும் பழக்கம் உள்ள மகன் தமிழரசனை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த தமிழரசன் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சடைந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Son commits suicide in kirishnagiri