தமிழ்நாட்டில் இதுவரை 10827 பேர் உடல் உறுப்பு தானம்..இந்திய மருத்துவ சங்க மருத்துவர் தகவல்! - Seithipunal
Seithipunal


வேலூர் நறுவீ மருத்துவமனையில் தேசிய உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்பட்டது .

வேலூர்மாவட்டம்,தோட்டப்பாளையம் வடக்கு, வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய உறுப்பு தான தினவிழாவில் உறுப்பு தானம் செய்தவர்கள் மற்றும் அதன் மூலம் பயனடைந்தவர்களை மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத் பொன்னாடை அணிவித்துகௌரவித்தார்.

1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி இந்தியாவில் முதல் முதலாக இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 3ம் தேதி தேசிய உடல் உறுப்பு தான தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வுமற்றும் ஊக்குவிப்பை ஏற்படுத்தும் வகையில், தேசிய உடல் உறுப்பு தான தின நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் ராமன் வரவேற்று பேசுகையில்: நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்புகளான இருதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழ்நாடு அரசுஅனுமதிவழங்கியுள்ளது. அதன்படி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளிலும், நறுவீ உட்பட 134 தனியார் மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது. உடல்உறுப்பு தானம் வழங்க முன் வருபவர்கள் transtan.tn.gov.in என்ற வலைதளம் மூலம் விருப்பம் தெரிவிக்கலாம் என சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளைத் தலைவர் டாக்டர்.வெங்கட்ரமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வை தொடங்கி வைத்து பேசுகையில் நாட்டில் சுமார் 2.8 இலட்சம் பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் தெலுங்கானா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு, தில்லி ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. அதிலும்
தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையிலும் 10827 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் என்றார். 

இதனைத் தொடர்ந்து நறுவீ மருத்துவமனை சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர். இதயசந்திரன் பங்கேற்று பேசுகையில் ஒருவர் தனது உடலில் ஒன்பது உறுப்புகளை தானமாக வழங்கமுடியும். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உருவாக வேண்டும். இது ஆரோக்கியமான சமுதாயதத்தை உருவாக்கும். பத்து இலட்சத்தில் ஒருவர் தான்உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மூளைச்சாவு அடைந்தவர்களை உயிர்பிழைக்க வைக்க முடியாது என்பதால் மூளைச்சாவுஅடைந்தவர்களின் உறுப்புகளை தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் மற்றும் அதன் மூலம்பயனடைந்தவர்களை நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இதில் மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர்.பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ஜேக்கப்ஜோஸ், மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

So far in Tamil Nadu 10827 people have donated organs Information from the Indian Medical Association doctor


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->