தமிழகத்தில் பணியின் தாக்கம் எப்போது குறையும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் பனியின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பணியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் பகலில் அதிக வெயிலும் அதிகாலையில் கடும்பனியும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேசுகையில், ஜனவரி பிப்ரவரி மாதங்களை குளிர்கால மாதங்கள். பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலையானது 30 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும்.

பகல் நேரங்களில் வெப்ப காற்றின் காரணமாக நீர்நிலைகள் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவி ஆகி மேலே நகர்கிறது இரவு நேரங்களில் மேகங்கள் இல்லாத சூழ்நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காற்று இல்லாத காரணத்தினால் அந்த நீர் துளிகள் காற்றில் உள்ள தூசுக்களில் படிந்து புகை மண்டல வடிவிலான சூழ்நிலை நமக்கு தருகிறது.

தற்போது அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்த பணியின் தாக்கம் அடுத்த 4,5 நாட்களில் படிப்படியாக குறைந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Snow step by step decrease in next 5 days in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->