கோவை விமான நிலையத்தில் சிக்கிய மலைப்பாம்பு - அதிரடி காட்டிய அதிகாரிகள்.!
snakes sezied in coimbatore airport
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 7ம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகள், சில பார்சல்களை விமான நிலையத்தில் விட்டுச் சென்றிருந்தனர்.
அந்தப் பார்சல்களில் சில பெட்டிகள் வித்தியாசமாக இருந்ததால், சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஸ்கேனரில் வைத்து சோதனையிட்டதில் அந்த பெட்டியில், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பெட்டியைப் பிரித்து பார்த்ததில், ஆப்ரிக்காவை தாயகமாக கொண்ட அரிய வகை பந்து மலைப்பாம்பு, அரிய வகை சிலந்திகள், ஓணான்கள் மற்றும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரக ஆமைகள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. அவற்றில் பெரும்பாலான ஆமைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், மூன்று பயணிகள் அந்த பெட்டிகளை விட்டுச்சென்றதும், அவர்களை செல்போனில் பேசி வரவழைத்து இருவரை கைது செய்ததும், அவர்கள் டோம்னிக், ராமசாமி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தப்பியோடிய ஒருவரையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
snakes sezied in coimbatore airport