பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு ரூ.21,000 - இந்த பயிற்சி மட்டும் முடித்தால் போதும்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் பட்ட படிப்பு முடித்த மாணவர்களுக்கு அரசு சார்பில், தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு வேலை வாயப்புடன் கூடிய தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி NTTF நிறுவனத்தின் மூலம் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6மாதம் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்க ளுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.16,000/- முதல் ரூ.21,000/- வரையிலும், பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.21,000/- முதல் ரூ.25,000/- வரையிலும் பெறலாம். மேலும் புகழ்பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ www.tahdco.com இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Skill development training in degree student salem districts


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->