அதிர்ச்சி.. தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - மாணவர்களின் கதி என்ன?
six students injured for school van overturn railway track near viruthachalam
தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து ஆறு மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த வேன் பூவனூர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆறு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து வேனை தூக்கி தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். மேலும் படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்த போது ரெயில் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கடலூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
six students injured for school van overturn railway track near viruthachalam