#தமிழகம் | பற்றி எறியும் பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரம் - அதிர்ச்சி காணொளி!
SIVAKASI PATHARAKALIYAMMAN TEMPLE FIRE ACCIDENT
சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீ விபத்து/கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் நிலையில், இன்று இரவு சுமார் 8 மணி அளவில் கோவில் கோபுரம் சாரம் மேல் மூடிருந்த துணியில் தீப்பற்றி இருந்துள்ளது.
50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பராசக்தி பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
தற்போது ராஜ கோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த தார்பாயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின் படி ராக்கெட் பட்டாசின் தீப்பொறி பட்டு இந்த தீ விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
English Summary
SIVAKASI PATHARAKALIYAMMAN TEMPLE FIRE ACCIDENT