சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் அமைந்துள்ள ஞானவேல் என்பவரின் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என தொடக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தினால் ஆலையின் ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. தொடர்ந்து வெடிப்புகள் நிகழ்வதால் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீயின் தீவிரத்தால் அருகே செல்வது கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி நெருங்கி வருவதால், அந்த பகுதியில் உள்ள பல பட்டாசு ஆலைகளிலும் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அத்தகைய பிஸியான வேளையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து, சுற்றுப்பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடிப்பின் தாக்கத்தால் பல கிலோமீட்டர் தூரத்திலும் அதிர்வு உணரப்பட்டதாகவும், சில இடங்களில் வீடுகளின் கண்ணாடிகள் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மரணமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் காயமடைந்தவர்களின் நிலை தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. தீயணைப்பு படையினர் பல மணி நேரமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivakasi crackers factory blast Accident Virudhunagar 


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->