விருதுநகரில் ஆசை காட்டி ரூ.2.75 கோடி மோசடி செய்த 4 பெண்கள்.! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் அதிக வட்டி தருவதாக ஆசைக்காட்டி 2.75 கோடி ரூபாய் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஜான் செல்வராஜ், விக்னேஷ் குமார், அவரது மனைவி மணிமேகலை (வயது28), மணிமேகலையின் சகோதரி ஷர்மிளா (25 மற்றும் சிவகாசி ரிசர்வ் லயனை சேர்ந்த கோகிலவாணி ஆகிய நால்வரும் இணைந்து சிவகாசி தென்றல் நகரில் இனிகோ என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

அவர்கள் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிக வட்டியை நம்பி 100க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால் முதலீடு செய்த பணம் பெரும்பாலானோருக்கு திருப்பித் தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த விஷ்ணுபிரியா என்பவர் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 14 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 100க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து இதுபோல் ஏமாந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakasi 4 women fraud in finance company


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->