#சென்னை 'இன்ஸ்டா' நாடக காதலனிடம் சிக்கிய சிவகங்கை மாணவி மீட்பு.!  - Seithipunal
Seithipunal


சிவகங்கையை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் காதல் வலையில் சிக்கி, சென்னைக்கு தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அடுத்துள்ள எஸ் எஸ் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரின் மகள் நிவேதா (19 வயது). இவர் மதுரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி முதல் நிவேதாவை காணவில்லை என்று பெற்றோர்கள் எஸ் எஸ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிவேதாவின் செல்போன் எண்ணுக்கு வரும் அழைப்பை கண்காணித்து வந்தனர்.

இதில் அவர் சென்னையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சென்னைக்கு விரைந்த போலீசார் மாணவி நிவேதாவை பத்திரமாக மீட்டனர். மேலும் அவருடன் தங்கியிருந்த சென்னை திருவாஞ்சேரி மாப்பேடு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (23வயது) என்பவரை போலீசார் விசாரணை செய்வதற்காக எஸ் எஸ் கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் மூலம் வெற்றிவேலுக்கும், நிவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கருதிய நிவேதா, வெற்றிவேல் உடன் வாழ்வதற்காக சென்னைக்கு சென்று இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivagani college girl escape


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal