ஒருமுறை வந்தால், 3 முறை கட்டணம் பிடிப்பு.. சிவகங்கை திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அட்டூழியம்.!
Sivaganga Thiruppachethi Toll Plaza Offence Amount Reduce Fastag System Drivers Complaint
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ராஜகம்பீரம் கிராமத்தை சார்ந்தவர் கமர் ரகுமான். இவருக்கு சொந்தமாக நான்கு சக்கர வாகனம் உள்ள நிலையில், இந்த வாகனம் கடந்த ஒரு வாரமாக வீட்டில் உள்ளது.
இந்நிலையில், மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஜாலியில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியை வாகனம் கடந்து சென்றதாக கூறி, பாஸ்ட்டேக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது என குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காரின் உரிமையாளர், ஆதாரத்துடன் சுங்கச்சாவடியில் சென்று முறையிட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த சுங்கச்சாவடி மேலாளர் சரிவர பதில் அளிக்காததை தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், இது குறித்து ரகுமான் தெரிவிக்கையில், இந்த சுங்கச்சாவடியில் இருந்து பலமுறை பணம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், பணத்தை பறிகொடுத்து கேள்வி கேட்டால் தகுந்த பதில் வருவதில்லை என்றும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாது, மானாமதுரை சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் கார் ஓட்டுநர்களும் இதே குற்றசாட்டை முன் வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Sivaganga Thiruppachethi Toll Plaza Offence Amount Reduce Fastag System Drivers Complaint