பள்ளிப்பேருந்தை ஜோடித்து வருமானம் பார்த்த கும்பல்.. வாங்கிய கடனுக்கு உருட்டு சம்பவம்...! - Seithipunal
Seithipunal


பள்ளி நிர்வாகியிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக வாகனத்தை இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக கூறி, வாகனத்தை நிறம் மாற்றி விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது. 

சிவகங்கையில் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தி வந்தவர் அருள். இவரிடம் கோயம்புத்தூரை சேர்ந்த அவரது நண்பர் யூசுப் அலி என்பவர், ரூபாய் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த மே மாதம் உடல்நலக்குறைவால் அருள் உயிரிழந்து இருக்கிறார்.

அவரது மகன் வினோத், யூசப் அலியிடம் தந்தை கொடுத்த ரூபாய் 6 இலட்சம் பணத்தை கேட்டுள்ளார். பணத்திற்கு பதிலாக பள்ளிக்கு சொந்தமான 3 வாகனங்களையும் சர்வீஸ் செய்து தருவதாகக் கூறிய யூசுப் அலி, வாகனத்தை எடுத்து சென்றுள்ளார். 

பள்ளி வாகனம் மஞ்சள் நிறத்தில் இருந்த நிலையில், அதனை பட்டி டிங்கரிங் பார்த்து மஞ்சள் நிற வர்ணத்தை முழுவதுமாக பெயின்டிங் செய்து மாற்றி வெள்ளை நிறத்தில் புதிய வாகனம் போல மாற்றி இருக்கிறார். இந்த வாகனத்தை, யூசுப் அலி தனது கூட்டாளி சாம்பால் என்பவருடன் சேர்ந்து அந்தோணி மைக்கேல் சேவியர் என்பவரிடம் ரூபாய் 10 இலட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக வினோத் வாகனம் குறித்து கேள்வி எழுப்பியும் உரிய பதில் வராத காரணத்தால், சந்தேகம் அடைந்த வினோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறிய விஷயம் தெரியவரவே சாம்பால், அந்தோணி மைக்கேல் சேவியர் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள யூசுப் அலியை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivaganga Private CBSE School Bus Stolen and Painted Different Color and Sell Cost Police Arrest Culprits


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->