என் ஏரியாவுல தண்ணி வரலை.. அதிமுக வார்டு கவுன்சிலர் கூட்டத்தில் சண்டை..! சட்டையை கிழித்துவிட்ட வாக்குவாதம்.! - Seithipunal
Seithipunal


காளையார்கோவில் அதிமுக ஒன்றிய கவுன்சிலரிடையே அடிதடி சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 13 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் மகேஸ்வரன், தனது வார்டு பகுதியில் எந்த திட்டப்பணிகளும் நடைபெறவில்லை என்று கூறினார். 

மேலும், அதிமுக ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியை குற்றம் சாட்டி பேசிய நிலையில், அவருக்கு உதவி கேட்டு தொடர்பு கொண்டால் ராஜேஸ்வரியின் கணவரே பெரும்பாலும் செல்போன் அழைப்பை ஏற்பதாக தெரிவித்துள்ளார். இதனால் 12 ஆவது வார்டு கவுன்சிலருக்கும், 13 ஆவது வார்டு கவுன்சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

12 ஆவது வார்டு கவுன்சிலர் மனோகரன் ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரிக்கு ஆதரவாக குரல் கொடுக்க, அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் இருவருக்கும் இடையே இறுதியில் கைகலப்பை ஏற்படுத்த, இருவரும் அங்கிருந்தவர்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Kalayarkoil AIADMK Counselor Meeting Intra party conflict


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal