நித்யானந்தாவிற்கு சிங்கிள்ஸ் எழுதிய கடிதம்.! இணையத்தில் வைரல்.!  - Seithipunal
Seithipunal


தேடப்படுகின்ற குற்றவாளியாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டு இருக்கின்றார். கைலாசா எனும் நாட்டை அவர் உருவாக்கி அதில், வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவருக்கு, கைலாசவில் ஓட்டல் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை கேட்டு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டது.

சமீபத்தில் இந்த இரு கடிதங்களும், இணையத்தில் வைரலாகிய நிலையில், தற்போது இன்னொரு கடிதம் நித்தியானந்தாவிற்கு எழுதப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதில், "சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம்.

எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.
தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறப்பட்டுள்ளது. 

தற்போது இந்த கடிதம் புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

single boys letter to nithiyanantha


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal