ஒரே நேரத்தில் கணவன்,மனைவி தற்கொலை; காரணம் என்ன?
Simultaneous suicide of husband and wife what is the reason?
குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த வேதகிரி மற்றும் ஹேமமாலினி தம்பதியர், கடந்த வாரம் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு செய்துள்ளனர். விரக்தியடைந்த வேதகிரி, ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு மயங்கி விழுந்தார். அதைக் கண்ட ஹேமமாலினியும் அதே மாத்திரைகளை அளவிற்கு மேல் எடுத்துக் கொண்டு மயங்கி விழுந்தார்.
இவர்களைப் பார்த்த மகன் இருவரையும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். ஹேமமாலினி சில நாட்களில் உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்ற வேதகிரியும் உயிரிழந்தார்.
இந்த மரணங்கள் பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இருந்த தம்பதியின் மகள், திருமணம் ஆகி கணவருடன் வெளியூரில் வசிக்கிறார். இவர்களது மகன் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Simultaneous suicide of husband and wife what is the reason?