தங்கத்துக்கு போட்டியாக எகிறியுள்ள வெள்ளி விலை; ஒரே நாளில் ரூ.5000 அதிகரிப்பு...!
Silver price increases by Rs 5000 in a single day to rival gold
இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,525-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் 92,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை லட்சத்தை தொடவுள்ளது. இந்நிலையில், தங்கத்தை போன்றே வெள்ளி விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருவதால் அதனை வாங்குபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த சில தினங்களாக காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து வருகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரனின் விலை ரூ.92 ஆயிரத்தை எட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

நேற்று முன்தினம் (அக்டோபர் 11) தங்கம் ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று (அக்டோபர் 12) ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. இந்நிலையில், இன்று (அக்டோபர் 13) தங்கம் விலை மீண்டும் ரூ.200 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 11,525 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 92,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
தங்கத்தைப் போல வெள்ளி விலையும் கிடுக்கிடுவன உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.195க்கும், 01 கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ஒரு லட்சத்து 95 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியை கொள்முதல் செய்பவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
English Summary
Silver price increases by Rs 5000 in a single day to rival gold