6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
A 6 year old girl was sexually assaulted Teenager sentenced to 7 years in prison
திருவள்ளூர் அடுத்த பட்டாபிராமில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ் (43). இவர் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி தனது வீட்டின் அருகே 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்படி ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கில் நடந்த விசாரணையை தொடர்ந்து நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபாராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் நீதிபதி த தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். மோசஸ் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
A 6 year old girl was sexually assaulted Teenager sentenced to 7 years in prison