பக்கத்து வீட்டுக்காரருடன் நெருக்கம் : மனைவியை சுட்டுக்கொன்று கணவர்!
Intimacy with the neighbor Husband kills wife
பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளக்காதல் இருந்ததை கண்டறிந்த கணவன் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் நிஷாத்என்பவருக்கு திருமணமாகி குடியா தேவிஎன்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கணவர் முகேஷ் நிஷாந்த் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் குடியா தேவிக்கு, பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது . இதுபற்றி முகேஷ் நிஷாந்துக்கு தெரியவர கடந்த வாரம் விடுமுறையில் வந்தபோது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மனைவியை கண்டித்துள்ளார் . அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த முகேஷ் நிஷாத், நாட்டு துப்பாக்கியால் மனைவியைச் சரமாரியாக சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . பின்னர், முகேஷ் நிஷாத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Intimacy with the neighbor Husband kills wife