அடுத்தடுத்து நடந்த பாலியல் சம்பவம்..என்ஜினீயர் உள்பட இருவர் கைது!
Consecutive sexual incidents Two people including an engineer arrested
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிசெய்த வாலிபர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு அருகே கும்பலகோடுக்கு உட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஆர்யன்குமார் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் மகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இதுபற்றி சிறுமி தனது பெற் றோரிடம் கூறினாள். அதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து கும்பலகோடு போலீஸ் நிலையத்தில் ஆர்யன்குமார் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்யன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி விட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல கோழிக்கோடு அருகே நரிக்குணி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாலி அசிஸ் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 13 வயது சிறுமியை ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
உடனே சிறுமி சத்தம் போட்டு விட்டு, அங்கிருந்து ஓடினாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அசிஸை கைது செய்தனர்.
English Summary
Consecutive sexual incidents Two people including an engineer arrested