நாகர்கோவில் அருகே அதிர்ச்சி சம்பவம்...! - வடையில் பல்லி கிடந்ததால் உணவகத்திற்கு சீல்...! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட வடையில் இறந்த பல்லி கிடந்ததாகப் பெண் ஒருவர் வெளியிட்ட காணொலி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உணவகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரக் குறைபாடுகளைக் கண்டறிந்து கடைக்குத் தற்காலிகமாகச் சீல் வைத்தனர்.

நாகர்கோவில் அருகே இறச்சகுளம் சந்திப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அந்த உணவகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் உணவு வாங்கச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு விற்பனை செய்யப்பட்ட வடையில் இறந்த பல்லி கிடந்ததாகத் தெரிகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பவத்தைப் படம்பிடித்து காணொலியாக வெளியிட்டார்.

இந்தக் காட்சி பரவியதைத் தொடர்ந்து, உணவகத்தின் சுகாதாரம் குறித்த கேள்விகள் எழுந்தன.இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, உணவு தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததும், அங்கு பணியாற்றிய ஊழியர் கையுறை அணியாமல் உணவுப் பொருட்களைக் கையாண்டதும் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, உணவகத்துக்குத் தற்காலிகமாகச் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking incident near Nagercoil Restaurant sealed after lizard found Vada


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->