சான்றிதழ் சரிபார்ப்பில் அதிர்ச்சி…! போலியான கல்வி ஆவணம் காரணமாக நகராட்சி உதவியாளர் பணிநீக்கம்...!
Shocking certificate verification Municipal assistant dismissed fake educational documents
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் உதவியாளராக பணியாற்றி வந்த ஐயப்பன், ஓய்வுபெறவிருந்த தருவாயிலேயே கடும் சர்ச்சையில் சிக்கினார். ராமநாதபுரம் நகராட்சியில் பணியில் சேர்ந்த அவர், 2024ஆம் ஆண்டு கீழக்கரைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

பணியில் சேர்ந்தபோது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகிலுள்ள பிராமணக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றதாகச் சான்றிதழ் சமர்ப்பித்திருந்தார்.
ஆனால், ஓய்வு பெறும் முன் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பிடப்பட்ட அந்த பள்ளி 1968ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுடன், தொடக்கப்பள்ளியாக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளது.
இதனால், ஐயப்பன் வழங்கிய கல்விச்சான்றிதழ் முற்றிலும் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது.இந்த விவகாரத்தைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர், உடனடி நடவடிக்கை எடுக்க கீழக்கரை நகராட்சி கமிஷனருக்கு அறிவுறுத்தினார்.
அதன் பேரில், கமிஷனர் கிருஷ்ணவேணி, ஐயப்பனை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
English Summary
Shocking certificate verification Municipal assistant dismissed fake educational documents