அசைவப் பிரியர்களுக்கு குட் நியூஸ்...! - நாமக்கல்லில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு எவ்வளவு சரிவு தெரியுமா...?
Good news non vegetarians Chicken prices drop Namakkal
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழியின் விலை தொடர்ந்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக்கோழியின் விலையை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது.இதன் காரணமாக, ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி தற்போது கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், கறிக்கோழியின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
English Summary
Good news non vegetarians Chicken prices drop Namakkal