பெற்றோரை உலுக்கிய அதிர்ச்சி...! சென்னையில் 3 மாதக் குழந்தை திடீரென உயிரிழந்த விவகாரம்...! - காவலர்கள் தீவிர விசாரணை - Seithipunal
Seithipunal


சென்னை அருகேயுள்ள திருவொற்றியூர் பாலகிருஷ்ணன் நகர், செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி கீர்த்தனா. தம்பதியருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சர்வேஸ்வரன் என்ற ஆண் குழந்தை பிறந்திருந்தது.நேற்று அதிகாலை கீர்த்தனா, குழந்தைக்கு பால் புகட்டிய பின்னர் தொட்டிலில் தூங்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தையை பார்க்கச் சென்றபோது, எந்த அசைவும் இன்றி கிடந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்

உடனடியாக குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து தகவலறிந்த காவலர்கள், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், குழந்தையின் திடீர் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shock that shook parents sudden death 3 month old baby Chennai Police investigating intensively


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->