நாகையில் மீண்டும் அதிர்ச்சி! இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடுமை தொடர்கிறது...!- 11மீனவர்கள் மீது தாக்குதல்
Shock again Nagaland cruelty Sri Lankan pirates continues Attack 11 fishermen
நாகை நம்பியார்நகர் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள், நேற்று மதியம் கடலுக்கு புறப்பட்டனர். இதில் இரவு 8 மணியளவில் கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,2படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் கத்தி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களால் மீனவர்களை தாக்கி, வெள்ளிச் செயின், மோட்டார் என்ஜின், வாக்கிடாக்கி, மீன்பிடி வலை, ஜி.பி.எஸ் கருவி, செல்போன்கள்,பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பறித்து தப்பி சென்றனர்.
அங்கு காயமடைந்த மீனவர்கள் அதிகாலை கரைக்கு திரும்பி, நாகை கடலோர பாதுகாப்பு குழும காவலில் புகாரளித்தனர். மேலும், காவலர்கள் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த 11 பேரும் தற்போது ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
English Summary
Shock again Nagaland cruelty Sri Lankan pirates continues Attack 11 fishermen