ஷிபு சோரன் உடல்நிலை கவலைக்கிடம்..தொண்டர்கள் கவலை!
Shibu Sorans health is a concern devotees are worried
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது இதனால் தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
ஷிபு சோரன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் தற்போது ஷிபு சோரனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 2005ம் ஆண்டில் 10 நாட்கள் மட்டுமே அவர் பதவி வகித்துள்ளார்.
இதன் பின்பு, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை, பின்பு, 2009ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது, அவரது மகனும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
English Summary
Shibu Sorans health is a concern devotees are worried