திண்டுக்கல்லில் பரபரப்பு - நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 ஆண்டுகள் சிறை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளரும், அ.ம.மு.க பிரமுகருமான ஜோதி முருகன், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து கல்லூரியில் பயிலும் மாணவிகள் சிலர் திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், கல்லூரி வளாகத்தில் திடீரென போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகனை மாணவர்கள் தாக்கினர். 

இதையடுத்து போலீசார் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், விடுதி காப்பாளர் அர்ச்சனா உள்ளிட்ட மேலும் சிலர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 75,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven years jail penalty to nursing college deen in dindugal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->