தாறுமாறமாக ஓடிய கார் - பயணிகள் 7 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சென்னை அடையாறில் இருந்து தொழிலதிபர் ஒருவர் தனது சொகுசு காரில் பல்லாவரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தக் காரை கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இதையடுத்து இவர்கள் திரிசூலம் சிக்னலில் இருந்து புறப்பட்ட போது, ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கியதால் கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சென்னை விமான நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

இதைத்தொடர்ந்து கார், அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் பாய்ந்ததில், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார் படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக குரோம்பேட்டை மற்றும் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநரான ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விபத்து ஏற்படுத்திய பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஆட்டோ மெட்டிக் கியர் மற்றும் அதிக பவர் உடையது என்று தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven poples injured for accident in pallavaram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->